in , ,

ஸ்மார்ட் ஃபோன் விற்பனையிலிருந்து L.G. நிறுவனம் விலகல்.

மின்னணு உபயோக பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜி, ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது

 

மின்னணு உபயோக பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜி, ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 

கடந்த 2 வாரங்களாக எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் தயாரிப்பை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 

 

கம்பெனியின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்  திங்கள் கிழமை இதற்கான ஒப்புதலை அளித்ததாக எல்.ஜி நிறுவன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் டிவிசனில் கடும் இழப்பை எல்.ஜி நிறுவனம் சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு 751 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு ஸ்மார்ட் போன் பிரிவில் எல்.ஜி நிறுவனம் இழப்பை சந்தித்தது. 

 

ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து முழுவதுமாக அடுத்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி எல்.ஜி யின் ஸ்மார்ட் போன்  வணிகம் முற்றிலும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

படிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறையும்..

1000 ஆண்டுகள் பழமையான உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவில்..