in

சின்னத்திரை நடிகை மற்றும் அவரது தங்கையை வீதியில் மானபங்க படுத்திய துணை இயக்குனர்

பிரபல சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் ஜெனிபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் துணை இயக்குனருடன் காதல் வயப்பட்டதால் தகராறு

பிரபல டிவி சேனல் சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் ஜெனிபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது சீரியல் துணை இயக்குனருடன் காதல் வயப்பட்டதால் தகராறு நேர்ந்துள்ளது.

நடிகை ஜெனிபர் முதல் கணவர் சரவணன் உடன் குடும்ப தகராறு காரணமாக விவாகரத்து நடந்து வரும் நிலையில், பிரபல டிவி சேனலில் துணை இயக்குனராக பணியாற்றி வரும் நவீன் குமார் என்பவருடன் காதலித்து திருமணம் செய்வதாக முடிவெடுத்துள்ளனர். தற்போது காதலித்து வந்த நவீன் குமாருக்கு வேலை பறிபோனதால் கொடுக்கல் வாங்கலில் இருவருக்குள்ளேயும் விரோதம் ஏற்பட்டுள்ளது.


சென்ற 18 ஆம் தேதி அன்று குடும்பத்துடன் காரில் சென்ற ஜெனீபரை வழிமறித்து நவீன்குமார் அவரின் தந்தை மற்றும் தம்பியுடன் சேர்ந்து அவர்களை தாக்கி, ஜெனிபரின் தங்கை ஆடையை கிழித்து மானபங்க படுத்தியுள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும்  நவீன்குமாரின் தந்தை காவல் துறையில் அமைச்சு பணியாளராக பணி புரிவதால் காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தன் மீது விபச்சார வழக்கு போடுவதாக மிரட்டியதாக ஜெனிபர் வேதனைப்பட்டார்.

 

எங்களை தாக்கிய வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பித்தும் அவர்கள் மீது சாதாரண வழக்கினை போட்டதால் தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்தாகவும் தற்போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடிகை ஜெனிபர் புகார் அளித்துள்ளார். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஐபிஎல் 2021: கொல்கத்தாவை சமாளிக்குமா ராஜஸ்தான் அணி!

அருண் விஜய் படம் ஹிந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர்