in , ,

கருப்பு, சிவப்பு சைக்கிள் – கருப்பு, சிவப்பு மாஸ்க் புரிஞ்சு போச்சு..!!

நடிகர் அஜித்குமார் கருப்பும், சிவப்பும் கலந்த மாஸ்க் அணிந்தும், நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து கருப்பு, சிவப்பு சைக்கிளிலும் வாக்களிக்க வந்தனர்.

 

இன்று காலை நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூரில் வாக்குப்பதிவு செய்ய வந்திருந்தபோது அவர் அணிந்திருந்த மாஸ்க் தற்போது பேசு பொருளாக உள்ளது. கருப்பும் சிவப்பும் கலந்த அவர் மாஸ்க் அணிந்து இருந்தார். இதனால் திமுகவுக்கு அவர் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.

 

 

நடிகர் அஜித்குமார், 20 நிமிடம் முன்பே தன் மனைவி  ஷாலினி உடன் தனது ஜனநாயக கடமையை செய்ய வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றார். 

 

 

இதேபோல் பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் வாக்கு செலுத்த நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றது காலை முதலே வைரலாகி வருகிறது. இவரது சைக்கிளில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறம் இருந்தது. இதன் காரணமாக விஜய்யும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

தற்செயலாக இது ஒரு கட்சியின் கொடி நிறத்தில் இருந்தால், உடனே அந்த குறிப்பிட்ட பிரபலம் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக குறியீடு கண்டுபிடிப்பது நெட்டிசன்களின் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Kanmani Serial fame Actress Leesha Eclairs Photos Collection

 மத்திய அரசின் PFCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா?