in

தனுஷுக்கும்,நயன்தாராவுக்கும் மோதலா.. நடந்தது என்ன?

கர்ணன் படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

 

தனுஷ் படத்தை தொடர்ந்து நயன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகா உள்ளது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார். 

 

 

 

மேலும் இப்படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படமான ‘நிழல்’ அதே தினத்தில் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

நிழல் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஏர் ஹோஸ்டஸ் லுக்கில் தொடையை காட்டும் லாஸ்லியா…

Reba Monica John ‘Kutty Pattas’ Movie Photos