in

மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் அடுத்த படம்!

ஏப்ரல்-15 தமிழ் புத்தாண்டில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது கர்ணன் திரைப்படம்.

ஏப்ரல்-15 தமிழ் புத்தாண்டில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது கர்ணன் திரைப்படம். தற்போது மீண்டும் நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பககத்தில் தெரிவித்துள்ளார்.

 

இந்த படத்திற்கான கதாபாத்திர தேர்வுகள் தொடங்கிவிட்டதாகவும் அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதகவும் தெரிவித்துள்ளார். கர்ணன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு அவர்களே இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து ராட்சசன் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தையும், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தையும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் விக்ரம் மகனான துருவ் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

ஐபிஎல் 2021: கொல்கத்தாவை சமாளிக்குமா ராஜஸ்தான் அணி!