in ,

நடிகை ரம்யா பாண்டியன் 59  மரக்கன்றுகளை நட்டதின் காரணம் என்ன?

உலக பூமி தினம் முன்னிட்டு விவேக்கின் ஒரு கோடி மரம் நடும் கனவை பூர்த்தி செய்வதற்காக ரம்யா பாண்டியன் மரக்கன்று நட்டார்.

 

நேற்று ஏப்ரல் 22 , உலக பூமி தினம் முன்னிட்டு பத்மஸ்ரீ திரு.விவேக்கின் ஒரு கோடி மரம் நடும் கனவை பூர்த்தி செய்வதற்காக அவரது ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்களும் மரம் நட்டு வருகிறார்கள்.

 

விவேக்கின் வயதை குறிப்பிடும் வகையில் 59 மரங்கள் நடப்பட்டது

அந்த வகையில், பிரபல நடிகை ரம்யா பாண்டியன் திருவள்ளூர்  ஆயுத படை மைதானத்தில்  மாவட்ட SP. அரவிந்தனுடன்  மற்றும் காவலர்கள் விவேக்கின் 59 வயதை குறிப்பிடும் விதமாக மரம் நட்டுள்ளனர்.


இயற்கையும் அவர் நடித்த படங்களும் இருக்கின்ற வரை அவர் எப்போது நம்மோடு  தான் இருக்கிறார். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இதில் கலந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

காவல்துறை ஆய்வாளர்  அரவிந்த் அவர்களுக்கும், இந்த அமைப்பை நடத்தி வருபவருக்கும், இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரம்யா பாண்டியன். 

 

 இதில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன்  திரு. விவேக் அவர்கள் அதிக மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார்  அதில் நானும் ஒருவர் என்று  குறிப்பிட்டுள்ளார் .

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஐபிஎல் 2021: நான்காவது தோல்வியை தவிர்க்குமா பஞ்சாப்?.. நடப்பு சாம்பியன் மும்பை அணியுடன் மோதல்

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு