in

 தள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்

பாகுபலியின் வெற்றிக்குப் பின் ராஜமௌலி தொடங்கிய படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2018 நவம்பரில் இந்தப் படம் தொடங்கப்பட்டது.

பாகுபலியின் வெற்றிக்குப் பின் ராஜமௌலி தொடங்கிய படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2018 நவம்பரில் இந்தப் படம் தொடங்கப்பட்டது. ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்க, செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். பாகுபலியைப் போல இந்தப் படத்துக்கும் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமா ராஜு, கொமரம் பீம் ஆகியோரது கதையை மேலோட்டமாக தழுவி இந்த படம் தயாராகிறது.

படத்தை ஆரம்பிக்கும் போது 2021 ஜனவரி பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர்.கொரோனா முதல் அலையில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் 2021 அக்டோபர் 13-க்கு பட வெளியீட்டை இயக்குனர் தள்ளி வைத்தார். இரண்டாவது அலையில் பிற படங்களின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்ட போதும், ராஜமௌலி அக்டோபரில் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரையும் மீறி பட வெளியீடு கொரோனாவால் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த வருடம் ராம் சரண் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை. சிரஞ்சீவியும், அவரும் நடிக்கும் ஆச்சார்யா படத்தில் அதிக கவனம் செலுத்தினார். அதேபோல் ஜூனியர் என்டிஆரும் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் ஏப்ரலில் முடித்து, அக்டோபரில் படத்தை வெளியிடுவதே திட்டம்.

இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில், ஊரடங்குவேறு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் வெளியீடு சாத்தியமேயில்லை என்று படக்குழுவினரே கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் 2022 ஜனவரியில் சங்கராந்தியை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.

ஐபிஎல் 2021: இன்று பெங்களூரு அணியை சமாளிக்குமா பஞ்சாப்?