in ,

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை பிற்பகலில் நிறுத்தி வைப்பு.

செக் மோசடி வழக்கில் காலையில் சென்னை சிறப்பு நீதிமன்றம் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை பிற்பகலில் நிறுத்தி வைப்பு.

 

சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர்.

 

 

 

தாங்கள் மோசடி செய்ய நினைக்கவில்லை. வட்டி அதிகமாக கேட்டதால் பணத்தை உடனே திரும்ப செலுத்த முடியவில்லை என்று வாதிடப்பட்டது. ஆனால் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

 

 

 

 

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடமும், ராதிகா மற்றும் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

 

 

 

இந்நிலையில் மேல்முறையீடு செய்யும்வரை, தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூவர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சரத்குமார், ஸ்டீபன் ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதித்ததால், விசாரணைக்கு ஆஜராகவில்லை என ராதிகா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

7 ஆண்டுகளாக ராடான் நிறுவனத்தின் பங்குதாரர் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது தற்போது இந்த வழக்கின் திருப்புமுனையாக ஓராண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு ஓராண்டு சிறை..

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு