in

ஹீரோவான சதீஷ், ஜோடியாக நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

ஹீரோவான சதீஷ், ஜோடியாக நடிக்க இருக்கும் குக் வித் கோமாளியின் பெண் பிரபலம் யார் என்று தெரியுமா…

 

சதீஷ் சமீபகாலமாக காமெடி நடிகரா, அல்லது துணை நடிகரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவரது நடிப்பில் காமெடி இல்லை என்பதே. அதுவும் கடந்த சில படங்களில் சதீஷ் செய்யும் காமெடிகளுக்கு சுத்தமாக சிரிப்பே வருவதில்லை. இருந்தாலும் அவரை காமெடியனாக வைத்து பலரும் படங்கள் எடுத்து வருகின்றனர்.

 

 

 

 

தற்போது அதிலும் ஒருவர் அனைவரையும் ஓவர்டேக் செய்து படம் எடுத்தால் சதீசை ஹீரோவாக வைத்து தான் படம் எடுப்பேன் என சபதம் எடுத்து வந்துள்ளார் இயக்குனர். அதிலும் இந்தப் படத்தைத் தயாரிக்கப்போவது விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான்.

 

 

 

 

இந்நிலையில் சதீஷ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளது சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பவித்ரா லட்சுமி என்பவர் தான்.

 

 

 

 

பவித்ராவுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது கண்டிப்பாக முன்னணி இளம் நடிகர் யாராவதுடன் ஜோடி சேருவார் என எதிர்பார்த்த நிலையில் கடைசியில் காமெடி நடிகருக்கு ஜோடியாக தான் வாய்ப்பு கிடைத்துள்ளது போல. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

  

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

குட்டை பாவாடையில் ஆண்கள் மனதை ஏங்க வைத்த – ஆத்மிகா

Cook with Comali Ashwinkumar images