in

34 வது பிறந்தநாளை கொண்டாடிய  தென்னிந்தியாவின் சாக்லேட் பேபி..

சமந்தா தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தார்.

சமந்தா தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து அதில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்து முன்னணி ஹீரோயின்னார்.

பிறகு, நான் ஈ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கவனம் செலுத்தினர். அதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சில வருடங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சமந்தாவின் கணவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.    

               

சமந்தா அக்கினேனி தனது 34 வது பிறந்தநாளை இன்று (ஏப்ரல் 28) கொண்டாடுகிறார். ஒரு நடிகையாக காலப்போக்கில் பரிணாமம் அடைந்தவர்.  2010 ஆம் ஆண்டில் ” யே மாய சேசாவே” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி திரை  பயணத்தை தொடங்கிய சமந்தா. தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ளார். சமந்தா தனது திரைப்பயணத்தை மாடலிங் துறை மூலம் சென்னையில் தொடங்கினார்.

பிறகு,ரவிவர்மன் மூலம் திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு அறிமுகப்படுத்தினார். முன்னதாக அவர் தனது வேடங்களில் பரிசோதனை செய்யத் தொடங்கி விட்டதாகவும், நடிப்புக்கு வரும்போது தனக்கு சவால் விடும் கதாபாத்திரத்தில் நடிக்க  விரும்புவதாகவும் கூறினார்.

                  

 

அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சமந்தாவிற்கு வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், #HappyBirthdaySamanthaAkkineni என்ற ஹேஷ்டேக் கையும் ட்விட்டரில் டாப் டிரெண்டிங் தீயாய் பரவி வருகிறது. ஆதிவி சேஷ், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கன்னா மற்றும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சமூக வலைத்தளங்களில் சமந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மாத சம்பளம் ரூ. 56,000-ல் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பற்றிய “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்!