in

வாக்கை செலுத்திய மறு நாளே ஜார்ஜியாவில் ஆரம்பமானது தளபதி 65 ஷூட்டிங்..

தொடர்ந்து 15 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பமாகி உள்ளது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

 

தளபதி 65 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் தளபதி 65 படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு ஜார்ஜியாவுக்கு சென்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கை செலுத்திய மறு நாளே நடிகர் விஜய் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார்.

 

 

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த நெல்சன் திலீப்குமார், சிம்புவின் வேட்டை மன்னன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆன நிலையில், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நெல்சன், தளபதி 65 படத்தை வேற மாறி தயாரிக்க வெளிநாடு சென்றுள்ளார்.

 

 

பட பூஜை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் எளிமையான முறையில் தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்டது. பட பூஜையில் கிரே கலர் சிலுக்கு சட்டை அணிந்து கொண்டு புசு புசு கன்னங்களுடன் தளபதி விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பூஜா ஹெக்டே செய்த காரியத்தால் சம்பளத்தை பேரம் பேசாமல் அப்படியே கொடுத்த சன் பிக்சர்ஸ்

இன்றைய ராசிபலன் 10-04-2021