in

மண்டேலா பட வழக்கில் இயக்குனர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மண்டேலா படத்தின்  மறு தணிக்கை செய்ய கோரும் வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது .

மண்டேலா படத்தின்  மறு தணிக்கை செய்ய கோரும் வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா படத்தில்  முடிதிருத்தும் தொழிலார்களை கழிவறையைக் கழுவ செய்வது, செருப்பால் அடிப்பது, காரின் பின்னே ஓடி வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளதாகவும். இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறி விட்டதாகவும் கூறப்பட்டது. 

எனவே இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் தேவையற்ற காட்சிகள் மற்றும்  வசனங்களை நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் திரைப்பட தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் ஆகியோர் விரைவில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பிரபல டைரக்டர் படத்தில் நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு