in

குக் வித் கோமாளி வைல்டு கார்டு ரவுண்டில் ஜெயித்தது இவர்  தானா?

ரசிகர்கள் எதிர்பார்த்தது ஒருவர் ஆனால் பைனலுக்கு முன்னேறியது இன்னொருவர்

 

தற்போது ஷகீலா மற்றும் பவித்ரா குக் வித் கோமாளி வைல்டு கார்டு சுற்றில் ஜெயித்து பைனலுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அது இன்றைய எபிசோடில் தான் ஒளிபரப்பாகும்.

குக் வித் கோமாளி 2ம் சீசன் பைனலுக்கு ஏற்கனவே 3 போட்டியாளர்கள் தேர்வாகிவிட்டனர். நான்காவது போட்டியாளரை தேர்ந்தெடுக்க வைல்டு கார்டு ரவுண்டு இந்த வாரம் நடைபெறுகிறது.

நேற்று சனிக்கிழமை எபிசோடில் வைல்டு கார்டு ரவுண்டுக்காக இதுவரை எலிமினேட் ஆன பவித்ரா, தர்ஷா குப்தா, ரித்திகா, மதுரை முத்து, ஷகீலா உள்ளிட்டவர்கள் வந்திருந்தார்கள்.

 

நேற்று அட்வான்டேஜ் டாஸ்க்குகள் தான் நடைபெற்றது. அதில் முதலில் ஜிலேபி செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன் பின் spiral potato செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அதிக எண்ணிக்கையில் செய்து ஷகீலா தான் ஜெயித்தார். அதனால் அவருக்கு இன்று நடைபெறும் போட்டியில் பெரிய அட்வான்டேஜ் காத்திருக்கிறது.

இந்நிலையில் பைனல் சுற்றுக்கு முன்னேறி வைல்டு கார்டு சுற்றில் ஜெயித்து இருக்கிறார்கள் ஷகீலா மற்றும் பவித்ரா என தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசி ஆளாக எலிமினேட் ஆன  ஷகீலா  தற்போது மீண்டும் பைனலுக்கு முன்னேறி இருக்கிறார்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இன்றைய ராசிபலன் 28-03-2021

பழனிசாமி குறுக்கு வழியில் வந்தவர் என்பதால் ஒப்பிட்டேன் – தி.மு.க எம்.பி.  ஆ.ராசா பேட்டி….