in ,

டாஸ்மாக்கில் முட்டை தகராறு ஒருவர் அடித்து கொலை.

லட்சுமிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திய போது இவருக்கும் அங்கிருந்த  2 வாலிபர்களுக்கும் முட்டை சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. 

 

லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (52). இவர், கிண்டியில் உள்ள கார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றியவர். மது பிரியரான இவர்  லட்சுமிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திய போது இவருக்கும் அங்கிருந்த  2 வாலிபர்களுக்கும் முட்டை சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. 

 

 

 

தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்து சென்ற அன்பழகனை பின் தொறந்து சென்ற இரண்டு வாலிபர்கள் அவரை வழி மறைத்து தாக்கியுள்ளனர்.இதில் பலத்த காயம் ஏற்பட்ட இவர் பரிதமாக உயிரிழந்தார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லட்சுமிபுரம் அசோகா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38) என்பவரை கைது செய்தனர். அவருடன் வந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஹெராயின் போதைப்பொருள் கடத்திய பெண்மணி கைது

 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார்.