in ,

போதையில் 3 மாத கர்ப்பிணி மனைவியை பீர் பாட்டிலால் குத்திய கணவன்.

விஜயலக்ஷ்மி தனது தந்தையை அடித்ததற்காக சண்டை போட்டு  வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த ரவி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து விஜயலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார்.

 

 

புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரவி (26). இவர் தள்ளுவண்டி மற்றும் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாசுகி நகரைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள் விஜயலட்சுமி (23). இவர்களுக்கு சிவா என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. 

விஜயலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ரவி மது போதையில் சென்றுள்ளார். அங்கு, மாமனார் வெங்கடேஷிடம், எனது மனைவி எங்கே என கேட்டுள்ளார். அதற்கு அவர், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாள், என கூறியுள்ளார்.

 

 

 

ஆத்திரமடைந்த ரவி, என்னிடம் தெரிவிக்காமல் எப்படி போகலாம், என கேட்டு வெங்கடேஷிடம் தகராறு செய்து அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மாமனார் வெங்கடேஷ் தலையில் அடித்துள்ளார். பிறகு வெங்கடேஷ் புளியந்தோப்பு போலீசில் புகார் செய்துவிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  இதனிடையில் விஜயலக்ஷ்மி வீட்டிற்கு வந்துள்ளார்.

தனது தந்தையை அடித்ததற்காக சண்டை போட்டு  வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.நள்ளிரவு ஒரு மணி அளவில் வியாசர்பாடி – எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மனைவியை மடக்கி, சமாதானம் செய்து, வீட்டுக்கு வர அழைத்துள்ளார்.

விஜயலக்ஷ்மி மறுத்ததால்  ஆத்திரமடைந்த ரவி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து விஜயலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே  விழுந்து கிடந்த  இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயலக்ஷிமின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இது அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ராஷ்மிகாவும் இல்லை தன்யாவும் இல்லை – விஜய் 65 வது படத்தின் செகண்ட் ஹீரோயின் டிக்டாக் பிரபலமா??                   

டிஜிட்டலில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதால் UPI பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி.