in ,

மோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர்  அடித்து கொலை செய்யப்பட்ட நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 115 ஏக்கரில்  1300 க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு உபயோகித்த வழக்கில் கைதாகிய முத்து மனோ என்பவர் இந்த சிறைச்சாலையில் அண்மையில் அடைக்கப்பட்டார்.

 

அவ்வப்போது சிறையில் இருந்த வேறு சில கைதிகளுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கைகலப்பாக மாறிய நிலையில் மற்ற கைதிகள் அடித்ததில் முத்து மனோ படுகாயமடைந்தார். இதனிடையே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார்.

மேலும் இந்த மோதலில் சிறை வார்டன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறையில் மோதல் நிகழ்வு தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஒரே வரியில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்ச்சித்த நடிகை!!

வைரலாகும் சூரி-விஜய் சேதுபதியின் “விடுதலை” படத்தின் பஸ்ட்லுக்!!