in ,

ஆபாச தளத்தில் ஆன்லைன் வகுப்பு மாணவிகளின் மார்பிங்  வீடியோ…

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் திடீரென வெளியானது இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஜூம் ஆப் மூலம் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் தினமும் கலந்து கொண்டனர். கடந்த வாரம் நடந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் திடீரென வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள்  இதை பற்றி அந்த ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

 

வகுப்பு தொடங்கியதும் யாரோ ஒருவர் மட்டும் ஜூம் ஆப்பை ஆன் செய்யாமல் அதை வீடியோவாக எடுத்து வேறு யாருக்கோ அனுப்புவதை கவனித்துள்ளனர். ஆனால், அந்த நபர் யாரென்று கண்டுபிடுப்பதற்குள் அவர் ஆன்லைனிலிருந்து போய் விட்டார்.

இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவிரும் அந்த மோசடி பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கூறினர்.பள்ளி நிர்வாகம் உடனே ஆன்லைன் வகுப்பை ரத்து செய்தது.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களின் வீடியோவை டார்க் வெப் சைட்டுக்கு விற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

கண் கண்ணாடி அணிபவரா? உங்களுக்கு தான் டிப்ஸ்!

காஷ்மீரில் துப்பாக்கியுடன் தப்பியோட முயன்ற தீவிரவாதி கைது