in ,

தம்பியை செருப்பு தைக்கும் ஊசியால் குத்தி கொலை செய்த அண்ணன்.

இருதயம் செருப்பு தைக்கும் ஊசியால் தம்பி என்றும் பாராமல், கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிசென்றுவிட்டார்.

 

அரும்பாக்கத்தை சேர்ந்தவர் இருதயம் ( 32). இவரது தம்பி லூர்துசாமி (28). இருவரும் செருப்பு தைக்கும் தொழிலை தனி தனியாக செய்துவந்தனர்.

இதில் தம்பி லூர்துசாமி தனது அண்ணனின் செருப்பு தைக்கும் ஊசியை கேட்காமல் எடுத்துவந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருதயம் தனது தம்பி கடைக்கு சென்று பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த செருப்பு தைக்கும் ஊசியால் தம்பி என்றும் பாராமல், கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிசென்றுவிட்டார்.

 

 

 

இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த லூர்துசாமியை அருகிலுள்ள மக்கள்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். சிகிச்சை பலனின்றி லூர்துசாமி  பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து இருதயத்தை தேடி வருகின்றனர்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

5  கிலோ கஞ்சா பறிமுதல்: கஞ்சா விற்பனையாளர் கைது

சுட்டெரிக்கும் சூரியன் – ஈரோட்டில் 110 டிகிரியை தாண்டியது