in ,

கள்ளக்காதலிக்கு செலவு செய்ய கொள்ளையனாக மாறிய  டாட்டூ கலைஞர்

டாட்டூ கலைஞர் ஒருவர் கள்ள காதலிக்கு செலவு செய்யவும் அவளது ஆசைகளை நிறைவேற்றவும்  கொள்ளையனாக மாறியதால் போலீசார் கைது செய்தனர்.

 

டாட்டூ கலைஞர் ஒருவர் கள்ள காதலிக்கு செலவு செய்யவும் அவளது ஆசைகளை நிறைவேற்றவும்  கொள்ளையனாக மாறியதால் போலீசார் கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகள் 2 பேர் மற்றும் கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் ராஜமங்கலம் மற்றும் வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதியில்  தொடர்ச்சியாக செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அண்ணாநகர் துணை ஆணையர் ஜவஹர் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணையில் ஈடுபட்டனர்.

 

 

மேலும், திருடுபோன செல்போனின் ஐஎம்இஐ எண்ணை வைத்து, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சங்கர் (25), மனோஜ் (25) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த 35 வயதான டாட்டூ கலைஞர் வசந்த் என்பவரை கைது செய்தனர்.

 

இதையடுத்து போலீசார் கூறியதாவது:

கைதான வசந்த், வடபழனி அருகே டாட்டூ (பச்சை குத்தும்) கடை நடத்தி வந்துள்ளார். இதில் சிறந்த டாட்டூ கலைஞராக பிரபலமாகியுள்ள அவர் சின்னத்திரை மற்றும் சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலருக்கும் டாட்டூ குத்தி அதிக வருவாயில் மிதந்து வந்துள்ளார்.

 

 

இவர் இதுமட்டுமில்லாமல் ஜிம்னாஸ்டிக், யோகா கலையிலும் சாதனை படைத்துள்ளார். மேலும் யூடியூப்பில் டாட்டூ குத்துவது தொடர்பாக வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது கடைக்கு  பெண்களும் டாட்டூ குத்த வருவதுண்டு. அதில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளகாதலியுடன் சுற்றி திரிவது மற்றும் கேட்கும் பொருட்களையெல்லாம் வாங்கித் தருவது என நாட்கள் போய் கொண்டிருந்தது. 

இதனிடையே, கொரோனா பாதிப்பால் கடந்த வருடத்தில் ஏற்பட்ட தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் டாட்டூ குத்துவதை நிறுத்தியுள்ளார். இதனால் பணக்கஷ்டம் ஏற்பட்டு, கள்ளக்காதலிக்கு கடந்த 6 மாதமாக  செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கூட்டாளிகளான சங்கர், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து செயின் மற்றும் செல்போன் கடத்தல்   கொள்ளையனாக மாறியுள்ளார்.

 

 

வசந்த் கைது  செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வண்ணாரப்பேட்டை, ராஜமங்கலம், வில்லிவாக்கம், கொளத்தூர் மற்றும் மீஞ்சூர் ஆகிய காவல் நிலையங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு என 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறியிருந்தனர். இதையடுத்து, வசந்த், அவரது கூட்டாளிகள் சங்கர், மனோஜ் மற்றும் 40 வயதான  கள்ளக்காதலி மங்களதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது 15 சவரன் நகை, 5 செல்போன்கள், 2 இருசக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

10 லட்சம் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு பீட்சா வாடிக்கையாளர்கள் அச்சம்

நாட்டு மக்கள் ஒத்துழைத்தால் முழு ஊரடங்கு அவசியம் இல்லை – பிரதமர் மோடி