in ,

மனைவியை லத்தியால்  அடித்து கொன்ற கணவன். பிறகு தானும் தற்கொலை

மனைவி நடத்தையில் மிதிலேஷிற்கு சந்தேகம் ஏற்பட ஹோலி பண்டிகை முடிந்ததும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மிதிலேஷ்(25). இவரது மனைவி மோனிகா(22). வடக்கு டெல்லி அலிப்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பாதுகாவலராக  மிதிலேஷ் பணிபுரிந்து வந்தார். 

மனைவி நடத்தையில் மிதிலேஷிற்கு சந்தேகம் ஏற்பட ஹோலி பண்டிகை முடிந்ததும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் வந்து  தடுத்த போது  நாங்கள் சண்டை போடவில்லை.

 

 

நான் மது அருந்தியதால் பிரச்சனை வந்தது என்று கூறி அவர்களை மிதிலேஷ் அனுப்பிவிட்டார். அதன்பின் மனைவியை லத்தியால் சரமாரியாக அடித்து கொன்றுள்ளார்.

பின்னர் மிதிலேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும்  போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை நீக்கியது பாகிஸ்தான்

5  கிலோ கஞ்சா பறிமுதல்: கஞ்சா விற்பனையாளர் கைது