in ,

சன் ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்வது?

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகும் போது வெயிலில் அலைந்து வேலை செய்பவர்கள் மற்றும் பாதசாரிகள் வெயிலுக்கு பலியாவது உண்டு.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகும் போது வெயிலில் அலைந்து வேலை செய்யும் வியாபாரிகள், விற்பனை பிரதிநிதிகள், போக்குவரத்து காவலர்கள் என சில குறிப்பிட்ட பணிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பாதசாரிகள் வெயிலுக்கு பலியாவது உண்டு.

 

வெப்பத் தளர்ச்சி :

வெயிலின் அளவு அதிகரிக்கும் போது, உடலில் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடைந்து மிகுந்த களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம், நாவறட்சி அதிகமாக இருக்கும், தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் தாது உப்புகள் வியர்வை மூலம் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது.

 

 வெப்ப மயக்கம் :

நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்கிறவர்கள், திடீரென மயக்கம் அடைவதைப் பார்த்திருப்பீர்கள் இது வெப்ப மயக்கத்தின் விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் தாக்கத்தால் தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் இரத்தம் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு இரத்தம் வருவது குறைந்து, இரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காததால் மயக்கம் வருகிறது.

 

 வெப்பத்தால் வரும் மயக்கத்திற்கு முதலுதவி :

மயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்கு கீழே படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்ய வேண்டும். தலைக்குத் தலையணை வைக்க வேண்டாம். பாதங்களை உயரமாக தூக்கி வைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றி எடுத்து துடைத்து குளிர வைக்கவும். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள், உச்சி வெயில் நேரத்தில் வெயிலில் அலையாமல் இருத்தலே வருமுன் காப்போம் என்பதாகும்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

TNSTC-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்புகள் 2021

வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்தால் எடை குறையுமா?