in ,

வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்தால் எடை குறையுமா?

வெந்தயம் ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம். 

அன்றாடம் நாம் சமையவில்  பயன்படுத்தும் வெந்தயம் பல்வேறு மருத்துவ பயன்கள் நிறைந்தது. வெந்தய விதைகள் , வெந்தயக்கீரை முதலியவை மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது. வெந்தயம் ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம். 

வெந்தய நீர்:

இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகினால் நிறைய பலன்கள் கிடைக்கும்.

வெந்தய டீ :

வெந்தயத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் வெந்தயத் தூளுக்கு ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். வெந்தயத்தின் சத்துக்கள் தண்ணீரில் இறங்கி நிறம் மாறியதும் இறக்கி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம்.

வெந்தய நீரின் பலன்கள் :

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது :

எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் கொலஸ்டிரால் குறைய வெந்தயம் மிகவும் நல்லது. ஆய்வுகளிலும் வெந்தயத்தில் உள்ள வேதிப்பொருட்கள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது மேலும் இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டீராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இவை தான் கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு :

வெந்தயத்தை தினமும் எடுத்து வரும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். டைப் 1 மற்றும் டைம் 2 டயாபடீஸ் நோய்களின் தாக்கம் குறையும் ஏனெனில் வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை கலப்பதைத் தடுக்கிறது. 

இதய நோய்கள் :

இன்றைய பரப்பான உலகம், மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே இதய பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இதனைத் தவிர்க்க வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

சன் ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்வது?

மாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா?