in

முடி உதிர்கிறதா? சுக்குப் பொடியை ஹேர் பேக் போடுங்க!

சுக்குப்பொடி தலை முடிக்கா என்று அதிர்ச்சி அடைபவர்கள் இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

 

 

 சுக்கு நாம் ஒவ்வொருவரும் அறிந்த நாட்டு மருந்து. இதன் பயன்பாடும் அதிகம். சளியா , தலைவலியா , வயிறுவலியா , ஜீரணமாக வில்லையா சுக்கு மல்லி காபி குடி என்பார்கள். பிரசவித்த பெண்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட லேகியங்கள் , தீபாவளி லேகியம் என பல்வேறு விதமாக நமக்கு மருந்தாகிறது. இந்த சுக்கானது தலைமுடிக்கு மிகுந்த பலனளிக்கும் என்பது பெரும்பாலானோர்க்கு புதிய தகவல்.

 

 

 

 

இஞ்சியும் சுக்குவும் ஒன்றா?

சுக்கு என்பது இஞ்சியின் உலர்ந்த வடிவம் தான். இஞ்சியை தண்ணீரில் நீண்ட நேரம் ஊறவைத்து , சுத்தமாக பலமுறை கழுவி எடுத்து அதனை நன்கு காயும் வரை வெயிலில் உலர்த்தி எடுப்பார்கள்.ஈரப்பதத்தை இழந்த இஞ்சி தான் சுக்கு என உருமாற்றம் அடைகிறது.

 

முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் சுக்கு :

சுக்கில் பொட்டாசியம் , மெக்னீசியம் மற்றும் அவசியமான விட்டமின்கள் உள்ளது . இவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

 

 

முடி உதிர்வது என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரும் தலையாய பிரச்சினை. உலகில் தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. சுக்கு பொடியை கொண்டு தலைமுடியை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.

*சுக்கு பொடியானது தலையில் உள்ள பொடுகை நீக்குகிறது. மேலும் பொடுகினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல்களை நீக்குகிறது.

*  சுக்கில் உள்ள சைட்டோகைன்கள் மற்றும் கீமோகைன்கள் முடியின் வேர்க்கால்களை தூண்டி வலுவாக்குகிறது . மேலும் ஃப்ரி ராடிகல்களால் முடி உதிர்வதை தடுக்கிறது. 

* நல்லதோர் கன்டிஷனராக செயல்பட்டு கூந்தலுக்கு பொலிவு தருகிறது.

 

சுக்கு ஹேர் பேக் ( dry ginger hair pack)

ஒரு பங்கு சுக்கு பவுடருடன் ஒரு பங்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பேஸ்ட் ஆக்கி தலையில் தடவி ஊறவிடவும். பிறகு மென்மையான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கவும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

உடல் எடையை குறைப்பதில் கருஞ்சீரகம் எவ்வாறு பலன் தரும் என தெரிந்து கொள்ளுங்கள்!

தேமல் நீங்க  எளிய  இயற்கை  மருத்துவ முறைகள்