in

உடல் எடையை குறைப்பதில் கருஞ்சீரகம் எவ்வாறு பலன் தரும் என தெரிந்து கொள்ளுங்கள்!

கருஞ்சீரகமானது பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும், நோய்களை வரவிடாமல் தடுக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு.

 

 

 

கருஞ்சீரகம் என்பது ஆயூர்வேதம் மற்றும் யுனானியில் பயன்படும் மூலிகை என்று நாம் அறிவோம். கருஞ்சீரகமானது பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும், நோய்களை வரவிடாமல் தடுக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு. ஆரோக்கியம் முதல் அழகு காப்பதில் வரை கருஞ்சீரகம் பயன்படுகிறது. இதனைப் பயன்படுத்தி உடல் எடையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம்!

 

கருஞ்சீரகம் எவ்வாறு உடல் எடையை குறைக்கிறது?

கருஞ்சீரகம் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும், ஏனெனில் கருஞ்சீரகத்தில் நைஜிலென் ( nigellone ) எனும் ஆக்ஸிடென்ட் உள்ளது. இதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்பு கரைவதோடு அல்லாமல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.

 

 

 

 

கருஞ்சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்!

 

ரெசிபி -1 

 

கருஞ்சீரகத்தின் மீது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். கருஞ்சீரகம் அனைத்தும் எலுமிச்சை சாறில் மூழ்க வேண்டும். இதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். இந்த  விதைகளை தினசரி தண்ணீரில் கலந்து குடித்து வரவும்.

 

ரெசிபி -2 

 

ஒரு கப் பருப்பை வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து , இதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இதனுடன் நான்கு அல்லது ஐந்து விதைகள் என்ற கணக்கில் அரை டீஸ்பூன் அளவு கருஞ்சீரகம் சேர்த்து கொள்ளவும். இதனை சாப்பிடவும்.

 

ரெசிபி -3 

 

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சையை பிழிந்து கொள்ளவும்.இதனுடன் ஒரு சிட்டிகை கருஞ்சீரகப்பொடி மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். தொப்பை குறைய எளிய வழி.

 

எச்சரிக்கை : கர்ப்பக்காலத்தில் பெண்கள் ஒரு போதும் கருஞ்சீரகத்தை பயன்படுத்த கூடாது. ஐந்திலிருந்து எட்டு கருஞ்சீரகம் விதைகள் மட்டும் எடுத்தால் போதும். ஏனெனில் இதன் பக்கவிளைவுகள் என்றால் வாத , பித்த , கபம் தோஷம் ஏற்படும் என்பதால் அளவாக உண்ணவேண்டும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

சிஎஸ்கே அணியை சுலபமாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்..

முடி உதிர்கிறதா? சுக்குப் பொடியை ஹேர் பேக் போடுங்க!