in

தேமல் நீங்க  எளிய  இயற்கை  மருத்துவ முறைகள்

சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது.

 

 

தேமல் என்பது ஒரு வகை தோல் நோயாகும்.  வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகையான தேமல்கள் உள்ளன. 

 

 

 

சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது. மார்க்கெட்டில் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை  வாங்கி பயன்படுத்துபவர்கள் தேமலுக்கு ஆளாவது உண்டு. 

 

தேமலை குணமாக மூலிகைகள் பயன்தருகிறது அவற்றைப் பற்றி பார்ப்போம்.

 

 

 

* எலுமிச்சை சாறு கலந்து வெந்நீர் குடித்து வந்தால் தேமல் குணமாகும். மேலும் தேமல் உள்ள இடங்களில் எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய் கலந்து பூசி வரலாம்.

 

*கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இரண்டையும் பால் சேர்த்து அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி ஊறிய பிறகு குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

 

*கமலா ஆரஞ்சு தோலை  வெயிலில் நன்கு உலர்த்தி அதனை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

 

*மலைவேம்பு அல்லது வேப்பிலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

 

*வெள்ளைப் பூண்டு மற்றும் வெற்றிலை சேர்த்து நன்கு அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.

 

*கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து ஊறவிடவும்.

தினமும் தேமல் உள்ள இடத்தில் தடவி  10 நிமிடம் ஊற வைத்து பிறகு குளித்து வர தேமல் குறையும்.

 

*முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி  குளித்து வர தேமல் குறையும்.

 

 

 

 

*சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் குறையும்.

 

* நல்லெண்ணெய் குளியல் என்பது சருமத்திற்கு தேவையான ஒன்று. 

 

கெமிக்கல்கள் நிறைந்த க்ரீம் , சோப்பு தவிர்க்கவும் . மூலிகைகள் கலந்த குளியல் பொடிகளை கொண்டு குளிக்கவும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

முடி உதிர்கிறதா? சுக்குப் பொடியை ஹேர் பேக் போடுங்க!

ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டும் முருங்கைப்பூ!!!