in ,

10 லட்சம் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு பீட்சா வாடிக்கையாளர்கள் அச்சம்

புதுடெல்லியில் டாமினோஸ் பீட்சா வாங்கிய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை  ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.

 

 

இந்தியாவின் பிரபல பீட்சா நிறுவனமான டாமினோஸ் பீட்சா இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவி ஹேக் செய்து வாடிக்கையாளர்களின் தகவல் திருடப்பட்டு உள்ளது. குறிப்பாக  கிரெடிட் கார்டு தரவுகள் திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் டாமினோஸ் இதுவரை இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

 

அந்நிறுவனத்தின்  சைபர் தாக்குதல் குறித்து உயர் அதிகாரி ஒருவர், எங்கள் தளத்தில் இருந்து 18 கோடி ஆர்டர் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அதாவது பீட்சாவுக்கு கட்டணத்தை செலுத்திய விவரங்கள், பெயர், செல்போன் எண், இமெயில், முகவரி, உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது. 

 

மேலும் 10 லட்சம் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு  தரவுகளும் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து திருடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும்  ரூ.4 கோடிக்கு டார்க் வெப் என்ற இணையத்தில் விற்கப்பட இருக்கிறது என கூறியுள்ளது. இதனால் இந்த சைபர் அட்டாக் குறித்த தகவல் டாமினோஸ் இந்தியா வாடிக்கையாளர்களை சற்று பயமுறுத்தியுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ராஜினாமா – நாசர் மனைவி திடீர் முடிவு

கள்ளக்காதலிக்கு செலவு செய்ய கொள்ளையனாக மாறிய  டாட்டூ கலைஞர்