in ,

பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு – சச்சின் டெண்டுல்கர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 48 வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார்.

 

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 48 வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். பின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் எனக்கு மிகவும் மோசமானது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் 21 நாள் தனிமைப் படுத்தப்பட வேண்டிய கட்டாயம் நிலவியது.

இந்த மோசமான சூழலில்  எனது குடும்பத்தினர்,  நண்பர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பிரார்த்தனையும், நல் வாழ்த்துக்களும் தான் மனரீதியாக நான் உறுதியுடன் இருக்கவும் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரவும் பக்க பலமாக உதவியது. ஆகையால் அனைவருக்கும் நன்றி.

 

மேலும் மருத்துவர்களை ஆலோசித்து அவர்கள் அனுமதித்தால் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு எடுத்து உள்ளேன். சரியான நேரத்தில் செய்யும் இந்த உதவியினால் பல நோயாளிகளின் உயிரை காக்க முடியும். ஆகையால் நீங்களும் முடிந்த வரை ரத்த தானம் செய்து சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தந்து ட்விட்டர் பக்கத்தில்  சச்சின் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

கொல்கத்தா அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி

69 ரன் வித்தியாசத்தில் சுலபமாக பெங்களூரு அணியை வென்றது சென்னை அணி