in

வீட்டில் இருக்கும் போதும்  முகக்கவசம் அணிய வேண்டும்… நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் 

வீட்டில் இருக்கும் போது முகக்கவசம் அணியுங்கள் என பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறி உள்ளது.

வீட்டில் இருக்கும் போது முகக்கவசம் அணியுங்கள் என பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறி உள்ளது. வீட்டுக்கு விருந்தினர்களை அழைக்காதீர்கள். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசின்  நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி. கே. பால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய வி கே பால் இதுவரை வீட்டுக்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். ஆனால் தொற்று பரவும் விதத்தை பார்த்தால் வீட்டில் இருக்கும் போது முகக்கவசம் அணிவது நல்லது எனவும் குறிப்பிட்டார். வீட்டில் மற்றவருடன் அமர்ந்திருக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.

COVID-19 masks

அதிலும் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அவர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.  வீட்டில் அவர் தனி அறைகள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள மற்றவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். விருந்தினர்களை வீட்டுக்கு வர வைக்க கூடாது எனவும் தெரிவித்தார்.





Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர்  ஆண்ட்ரூ டை

இரண்டாவது கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டுக் கொண்ட நவரச நாயகன்