in

சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

 

 

கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணி வீரர்களும் இன்றைய போட்டியில் தீவிர முனைப்பு காட்டவுள்ளனர்.

 

 

 

 

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சி.எஸ்.கே அணி கடந்த தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடப்பு தொடரில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக செயல்பட காத்திருக்கின்றனர்.

 

 

 
 
இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 8 தடவையும் வென்று இருக்கின்றன.
 
 
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-
 

சென்னை சூப்பர் கிங்ஸ்: மொயீன் அலி அல்லது ருதுராஜ் கெய்க்வாட், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, கிருஷ்ணப்பா கவுதம், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் சுமித், ரிஷாப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா.

 

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

சென்னை வந்தடைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாளை மோதல்.

தோல்வியுற்ற UPI பரிவர்த்தனைக்கு ரூ100 அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!..