in

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 13 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின

ஐபிஎல் தொடரின் 13 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோஹித், டி காக் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 2(4) என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகளை எடுத்து தன் தனி திறமையை காட்டினர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதலில் ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் களமிறங்கி இரண்டாம் ஓவரில் 7 ரன்னுடன் ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா.

19வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக் கொண்ட ஹெட்மயர், பொல்லார்டு வீசிய 20ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து டெல்லி அணியின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தார்.

 

 

பின் 5 பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பொல்லார்டு வீசிய இரண்டாவது பந்து நோ பாலாக மாறியது. இதன் காரணமாக டெல்லி அணி 19.2 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பூட்டி வைத்திருந்த பெண்கள் மீட்பு

இன்று நடக்க உள்ள ஐபிஎல் இரண்டாம் ஆட்டத்தில் CSK VS KKR ஆகிய அணிகள் மோதல்