in

கொல்கத்தா அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி

ஐபிஎல் 18 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

ஐபிஎல் 18 வது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில், நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், பந்து வீச்சை தேர்வு தேர்வு செய்தது.

முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது . தொடக்க வீரர்களாக நிதிஷ் ராணா- ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிபாதி – ராணாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

134 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். பட்லர் 5 ரன்கள், ஜெய்ஸ்வால் 22 ரன்கள் , ஷிவம் துபே 22 ரன்கள் மற்றும் திவாடியா 52 ரன்கள் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

 

இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை குவித்து ராஜஸ்தான் வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் தன்னுடைய 2வது வெற்றியை கைப்பற்றியது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ரயில்வே வேலைவாய்ப்புகள் Railway Recruitment 2021

பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு – சச்சின் டெண்டுல்கர்.