in

ஐபிஎல் 2021: கொல்கத்தாவை சமாளிக்குமா ராஜஸ்தான் அணி!

இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி கட்டாயம் என்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது.

கொல்கத்தா அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி மற்றும் ரன் ரேட்டிங் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ளது.

 


நேருக்கு நேர்:

இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன, இதில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் வெற்றியும், கொல்கத்தா அணி 12 முறை வெற்றியும் பெற்றுள்ளது. 1 போட்டிகளில் முடிவு தெரியவில்லை

அதிகபட்ச ரன்:

ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 199 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 191 ரன்கள் அடித்துள்ளது.

குறைந்தபட்ச ரன்:

ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குறைந்தபட்சமாக 81 ரன்களுக்கு சுருண்டுள்ளது. கொல்கத்தா அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.   

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் அடுத்த படம்!

சின்னத்திரை நடிகை மற்றும் அவரது தங்கையை வீதியில் மானபங்க படுத்திய துணை இயக்குனர்