in ,

செல்போன் பறிபோன பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை

மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்து சென்றதால் பெற்றோருக்கு பயந்து மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

கள்ளக்குறிச்சி அருகே மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்து சென்றதால் பெற்றோருக்கு பயந்து மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 14 வயது மகன் மணிகண்டன். நேற்று முன்தினம் அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மணிகண்டனிடம் போன் பேச வேண்டும் என கூறி அவரிடம் இருந்து செல்போனை வாங்கி உள்ளார்.

போனில் பேசுவது போலவே நடித்துக்கொண்டு  அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தந்தை திட்டுவார் என பயந்து கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

மாணவர்களை பெற்றோர் மிரட்டி பயமுறுத்தி வைப்பது இது போன்ற  நிகழ்வுக்கு காரணமாக அமைந்து விடுவதாக  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

கொரோனா இறப்புகளை தடுப்பதே எங்கள் நோக்கம் – சென்னை மாநகராட்சி ஆணையர்

ஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார்