in ,

யார் தாதா என்பதில் போட்டி – பிரபல ரவுடி கைது

ஏரியாவில் யார் தாதா என்ற போட்டியில் தகராறு ஏற்பட்டு, நடந்த சண்டையில், டேனியல்  ராஜேஷ் என்பவரை கத்தியால் சராமரியாக வெட்டினார். 

 

கோயம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(25). அதே பகுதியை சேர்ந்தவர் டேனியல்(30). பிரபல ரௌடிகளான இவர்கள் இருவருக்கும் இடையே, ஏரியாவில் யார் தாதா என்ற போட்டியில் தகராறு ஏற்பட்டு, நடந்த சண்டையில், டேனியல்  ராஜேஷ் என்பவரை கத்தியால் சராமரியாக வெட்டினார். 

ராஜேஷ் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கோயம்பேடு போலீசார் ரவுடி டேனியலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த டேனியல் மறுபடியும் ராஜேஷை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்.

 

 

இதனையறிந்த  ராஜேஷ் கோயம்பேடு போலீசாரிடம்  புகார் அளித்தார். அதன் பேரில் கோயம்பேடு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி டேனியலை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரவுடி டேனியல் மீது, அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

லைக்குகளை குவிக்கிறது DDயின் ஓபன் லைட் காஸ்டியூம் – வெயில் தாங்கல!!

பாரம்பரிய உடையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…