in ,

நடிகர் அஜித்திற்கு செல்பியால் வந்த சோதனை!!

நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மருத்துவமனை பெண் பணியாளர் பணி நீக்கம். 

மருத்துவமனைக்கு சென்ற நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதின் மூலம் வேலை இழந்த  மருத்துவமனை பெண் பணியாளர் அஜித்தின் மேலாளர் மீது நம்பிக்கை மோசடி புகார் அளித்துள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பர்சானா இவர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அப்போது  நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அஜித்தை கண்ட பர்சானா அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.


இதைக்கண்ட மருத்துவமனை நிர்வாகம் பர்சானா-விடம் இருந்து அவரது செல்போனை பிடுங்கி வைத்து நிர்வாகத்தின் தனியுரிமை கொள்கை அடிப்படையில் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் புகைப்படம் எடுப்பதும், அதை சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் தவறு எனக் கூறி அந்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட கூடாது என்ற எச்சரிக்கையுடன் செல்போனை ஒப்படைத்துள்ளது.

ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதை வைத்து நடிகர் அஜித்துக்கு கொரோனா என சிலர் வதந்தியை பரப்பினர். இதனால் இக்கட்டுக்குள்ளான மருத்துவமனை நிர்வாகம் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்தது. இதைக் கேள்வியுற்ற அஜித்தின் மனைவி ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்திடம் பரிந்துரை செய்ததால் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

ஆனால் சில நாட்களிலேயே பர்சானா மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் சில காரணங்களை காட்டி பர்சானாவின் சான்றிதழ்களை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் போது போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை சந்தித்து பர்சானா தன்னால் நடிகர் அஜித் பற்றி வதந்தி பரவியதற்கு மன்னிப்புக் கோரி மீண்டும் தனக்கு வேலை கிடைக்க உதவுமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து அஜித்தை சந்திக்க வைத்து உதவி பெற்றுத் தருவதாக பர்சானாவிடம் சுரேஷ் சந்திரா தெரிவித்ததாகவும் ஆனால் சொன்னதை செய்ய மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பர்சானா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தன்னை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிய அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்குமாறு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்பீக்கள் மனிதரின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

அடிக்குற வெயிலுக்கு ஊருக்குள் வந்த 20 அடி நீளமுள்ள ராஜநாகம்

மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு