in ,

ஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார் 

சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட தங்களை ஆணவக் கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாக  காவல்துறையில் பாதுகாப்பு கோரி இளம்பெண் மதுரை கிளையில் வழக்கு

காதல் திருமணம்  செய்துகொண்ட தங்களை ஆணவக் கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாக  காவல்துறையில் பாதுகாப்பு கோரி இளம்பெண் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் ஒப்புதல் இல்லாமல் காதலித்தவரையே கரம் பிடித்ததாகவும், கணவர்  பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தங்களை தனது குடும்பத்தினர் சாதி படுகொலை செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 தன்னையும் தனது கணவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் கண்காணித்து வருவதாகவும், காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  இதனை விசாரித்த நீதிபதி இளங்கோவன் மனுதாரர்  தந்தையும், சித்தப்பாவையும்  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

செல்போன் பறிபோன பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை

காதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் தூக்கி வீசிய காதலன்