in ,

அறிய வகை சம்பவம்; கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்…

இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போது மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார்.

 

மனிதர்களின் வாழ்க்கை தொழில்நுட்பம், விஞ்ஞானம் என பரிணாம வளர்ச்சி பெற்றாலும் இயற்கையின் அதிசியங்களுக்கும் பஞ்சாமில்லாமல் இருக்கிறது. பல விசித்திரமான, நம்ப முடியாத அரிய நிகழ்வுகளை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போது மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர்.

 

 

 

இங்கிலாந்தின் பாத் நகரைச் சேர்ந்த ரெபேக்கா ராபர்ட்ஸ் (39) சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாகிவிட்டார். அவர் தனது கணவருடன் உடலுறவு கொண்ட சில நாட்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். அவர் கடந்தாண்டு செப்டம்பர் 17-ம் தேதி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர்கள் இரட்டையர்கள் என்றாலும் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

சூப்பர்ஃபெட்டேஷன் போன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டாவது குழந்தை கர்ப்ப காலத்தில் இறக்கிறது. ஆனால் ரெபேக்கா ராபர்ட்ஸுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார்.

கொரோனா விதியை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித்த நார்வே போலீஸ்…..