in ,

கொரோனா விதியை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித்த நார்வே போலீஸ்…..

பிரதமர் எர்னா சோல்பெர்க் கொரோனா விதிமுறையை மீறியதற்காக அந்நாட்டு காவல்துறை, இன்று ரூ. 1,75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, அந்நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க்  தனது 60-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். ஆனால், அந்நிகழ்ச்சியில் 13 பேர் கலந்துகொண்டனர்.

 

 

இதனால், அரசின் கட்டுப்பாட்டை பிரதமரே மீறிவிட்டார் என சர்ச்சை கிளம்பியதும், தாமாகவே முன்வந்து மன்னிப்பு கேட்டார்.இருந்த போதிலும், பிரதமர் எர்னா சோல்பெர்க் கொரோனா விதிமுறையை மீறியதற்காக அந்நாட்டு காவல்துறை, இன்று ரூ. 1,75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

இது குறித்து, நார்வேயின் தலைமை காவல் அதிகாரி ஓலே சாவெருட்சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருப்பதில்லை என்றார். மேலும், “சமூக கட்டுப்பாடுகள் குறித்த அரசின் விதிகளில், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது சரியே” என விளக்கம் அளித்துள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

அறிய வகை சம்பவம்; கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்…

பிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன் !