in ,

 விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா ஒரே நாளில் 3,668 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சம் கண்டு வருகிறது. அங்கு ஒரே நாளில் 86,704 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பிரேசிலில் ஒரே நாளில் 3,668 பேர் தொற்றால் உயிரிழப்பு; இந்தியாவின் நிலையும் மோசம்!

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

 

 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.87 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.39 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.20 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95,700-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும்  இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவில் 61,784 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 868 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சம் கண்டு வருகிறது. அங்கு ஒரே நாளில் 86,704 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,668 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

 

 

இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 355 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 553,933 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

இங்கிலாந்தில் 4,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 56 பேர் பலியாகியுள்ளனர். பிரான்சில் 30,702 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 348 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் புதிதாக 16,017 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 529 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 4,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 106 பேர் உயிரிழந்துள்ளனர்

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் பேசிய  ரிஷப் பண்ட்

 ஹாங்காங் சட்டமன்ற தேர்தல் முறையில் மாற்றம் – சீன அரசு நடவடிக்கை.